அரச தலைவர் கண்டிக்கு விஜயம் செய்யும் சந்தரப்பங்களில் பயன்படுத்தும் கண்டியிலுள்ள ஜனாதிபதி உத்தியோகபூவர் இல்லமான ஜனாதிபதி மாளிகையை மக்கள் பார்வையிடுவதற்கான சந்தரப்பம் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் பார்வைக்காக இந்த மாளிகையை திறந்துவிடுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
பிலிமத்தலாவை நிலமேக்கு சொந்தமான வளவில், ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு, அலங்காரத்துடன் நிர்மாணிக்கப்பட்டதுடன் குறித்த வீடு “அரசமாளிகை” எனும் பெயரிவேயே அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள வளவில் அண்மைய காலத்தில் நான்கு மாடிகளை கொண்ட கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டதாகவும் அதன் நான்காவது மாடியில் கேட்போர் கூடமொன்றும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாளிகையை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்தே இந்த ஜனாதிபதி மாளிகையை மக்களும் பாடசாலை மாணவர்களும் பார்வையிடுவதற்காக திறந்துவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.