அனிருத்தின் வளர்ச்சி இமயமலையை விட உயரமாக இருக்கும் போல, இசையமைத்த சில படங்களிலேயே தென்னிந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார்.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் இவரது இசை பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத்தை தான் இசையமைப்பாளராக புக் செய்துள்ளாராம்.
அது மட்டுமில்லாமல் கௌதம் மேனன் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இயக்கவிருக்கும் படத்திற்கும் இவர் தான் இசையாம். இவருக்கு முன் வந்த பல இசையமைப்பாளர்களுக்கே கிடைக்காத இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.