பொங்கலுக்கு வெளியான ஐ, ஆம்பள இரண்டும் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. தயாரிப்பில் இருக்கும் பிரமாண்டமும், உழைப்பும் கதை திரைக்கதையில் இல்லை என்பதை ஐ படத்தைப் பார்த்தவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதேபோல் ஆம்பள. சுந்தர் சி.யின் மூன்று மாதத்துக்கு ஒரு படம் பார்முலாவை அவர் மறுபரிசீலனை செய்யும்படி ஆம்பளயின் ரிசல்ட் வலியுறுத்துகிறது.
இவைகளுக்கு நடுவே வெளியான ஜீ.வி.பிரகாஷ் நடித்திருக்கும் டார்லிங் தற்போது பிக்கப்பாகியுள்ளது. இது ஜீ.வி.யை ரொம்பவே நெகிழ வைத்துள்ளது.
நான் நடித்துள்ள ‘டார்லிங்’ படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவு என்னை நெகிழ செய்கிறது. பெரும் ஆனந்தத்திற்கு அப்பாற்பட்டு, நல்ல படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற பொறுப்பையும் தந்துள்ளது.
அரும்பாடுபட்டு எனது ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். அனைவருக்கும் இதயம் கனிந்த எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தனது நன்றியை தெரியப்படுத்தியுள்ளார்.