ஜனாதிபதி மைத்திரியின் கட்அவுட், பேனர்களை அகற்ற உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடஅவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

maiththere-my3

இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் தமது உருவப்படம் உள்ள கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவையற்ற வகையில் பேனர்கள், கட்அவுட்களை காட்சிப்படுத்த பொதுமக்கள் பணத்தை விரயமாக்கியதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts