முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு தரப்பில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் பீ.எம்.யூ.டீ.பஸ்நாயக்கவிடம் கேட்டபோது, ‘அவ்வாறானதொரு தீர்மானம் இருப்பின், அந்த தீர்மானம் ஜனாதிபதியால் எடுக்கப்பட்டு ஜனாதிபதி செயலாளர் ஊடாக தனக்கு அறிவிக்கப்படும் என்றும் இதுவரையில் அவ்வாறானதொரு அறிவிப்பு தனக்கு கிடைக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இன்று (16) கூடவுள்ள பாதுகாப்புப் பேரவையின் போது, இது தொடர்பான ஒரு தீர்மானத்துக்கு வர முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
சரத் பொன்சேகாவுக்கு ஏற்கெனவே ஜெனரல் பதவிநிலை வழங்கப்பட்டிருந்ததால், அவருக்கு கட்டாயமாக பாதுகாப்பு பிரிவில் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், பொன்சேகாவுக்கு உயர் பதவியொன்று வழங்கப்படுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமையை உறுதி செய்தார்.