ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களாக ஒஸ்டின் பெர்ணான்டோ, திலக் ரணவிராஜா, டபிள்யூ.ஜே.எஸ்.கருணாரட்ண ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கி வைத்தார்.
அரச சேவையில் பல அனுபவகங்களை கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராவார்.
பல தசாப்தங்களாக அரச உயர்பதவிகளை வகித்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான திலக் ரணவிராஜா, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம், தபால் மற்றும் தொலைத்தொடர்புகள், வைத்திய மற்றும் சுதேச வைத்திய, ஊடகம், சமூக நலன்புரி, மகாவலி, நீர்வழங்கல், மின்சக்தி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல அமைச்சுகளில் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் சர்வதேச நிறுவனங்கள் பலவற்றில் அவர், உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான டப்ளியு. ஜே.எஸ் கருணாரத்ன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றினார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.