அண்ணனுக்கு மாஸ், தம்பிக்கு கஸ்மோரா

சூர்யா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார். ஹாரர் படமான இதில் சூர்யாவுக்கு ஜோடி நயன்தாரா.

soorya-karththy

சூர்யாவின் தம்பி கார்த்தி கொம்பன் படத்தை முடித்து அடுத்த மாதம் கோகுல் இயக்கும் கஸ்மோரா படத்தில் நடிக்க உள்ளார். மாஸ் படத்துக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள்.

மாஸில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராதான் இந்தப் படத்தில் கார்த்திக்கும் ஜோடி. மாஸ் போலவே இதுவும் ஹாரர் கலந்த சூப்பர்நேச்சுரல் படம்.

கஸ்மோரா படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Related Posts