ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 29 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அவர் நிதி அமைச்சக வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுவதுடன் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதே.
வெளிநாட்டு முதலீடுகள், வரி வருமானங்கள் மூலம் முறையான நிர்வாகத்தைச் செயற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசின் முக்கிய குறிக்கோள். திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் நாம் நாட்டைக் கட்டியெழுப்பும் அதேவேளை, உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்போம்.- என்றார்.