ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனங்கள் சிலவற்றை வெளியாட்கள் பயன்படுத்திவருகின்றமை குறித்து வெளியான தகவல்களை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
இவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக மீளப்பெறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.