ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திங்கட்கிழமை (12) அழைப்பாணை விடுத்தது.
சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகுமாறு மேற்படி நால்வருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
சோலங்காரச்சியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நீதவான் சுஜாதா அழகப்பெரும, இந்த அழைப்பாணையை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.