மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து.
கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர்.
எனினும் தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு பதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.