புலிக்கொடி எங்கும் இல்லை : ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்­பாணம் மற்றும் வடக்கில் எந்­த­வொரு அசம்­பா­வி­தங்­களும் நடை­பெ­ற­வில்லை என, தான் மகா­நா­யக்க தேர­ரிடம் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார்.

ranil

நேற்று கண்­டியில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

தற்­போது அந்தப் பகு­தியில் அமைதி நில­வு­வ­தா­கவும் இது­கு­றித்து காலை யாழ்ப்­பா­ணத்­திற்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் தக­வல்­களைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறினார்.

புலிக்­கொடி எங்கும் இல்லை எனவும், தமிழர் கூட்­ட­மைப்பு புலிக்­கொ­டியை ஏந்தி எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­வில்லை எனவும், நாட்­டுக்குள் தமது பிரச்­சி­னைக்­கான தீர்வைப் பெற்றுத் தருமாறே கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts