ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மீகாமன்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருந்தார்.
ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவை வைத்து மீண்டும் இயக்கவிருக்கிறார் மகிழ்திருமேனி.
மீகாமன் படப்பிடிப்பின் போது ஆர்யாவிடன் மகிழ்திருமேனி அடுத்தப் படத்திற்கான கதையை கூறியிருக்கிறார். இந்த கதை ஆர்யாவிற்கு பிடித்துப்போக அடுத்தப் படத்திலும் நானே நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.
ஆதலால் இவர்கள் கூட்டணியில் மற்றொரு படம் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆர்யா தற்போது ‘யட்சன்’, ‘புறம்போக்கு’, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களுக்குப் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.