யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய கற்கை பீடங்கள், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன 600 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சற் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (10) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டு இந்த கற்கை பீடங்களை அமைப்பதற்காக வேண்டுகோள் எமக்கு கிடைத்தது. அப்போது இருந்த இந்திய உயர்ஸ்தானிகர் மூலம் இந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன இந்த வருடம் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.