மஹிந்தவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது!– சீலரத்ன தேரர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றியிருந்தது போன்று எருமை மாட்டுக் கூட்டமொன்றை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டாம் என புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோருகின்றோம்.

தேர்தலில் அடைந்த வெற்றிக்காக அவருக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மஹிந்தவை சுற்றி இருந்தவர்களை எருமை மாடுகள் என குறிப்பிடுவதில் தவறில்லை ஏனெனில் அவர்களுக்கு மக்களின் பிரச்சினைகள் தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறான கூட்டமொன்று ஜனாதிதிபதி மைத்திரிபாலவைச் சுற்றி இணைந்து கொள்ளக் கூடாது என பிரார்த்தனை செய்கின்றோம் என சீலதரன தேரர் தெரவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts