நாட்டின் ஏழாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
அந்த பதவிப்பிரமாண வைபவத்துக்காக 6,000ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.