பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இயக்குனர் பாண்டிராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்புவிற்கும் அவரது தம்பி குறளரசனுக்கும் ஒரு டுவிட் செய்திருந்தார்.
இதில் ‘டீசர் பொங்கலுக்கு வருகிறது, ஆனால், இன்னும் பின்னணி இசை வரவில்லை, என்னம்மா இப்படி பண்றீங்களேமா?’ என்று டுவிட் செய்திருந்தார்.