புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

John Kerry

மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த முறையில் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜோன் கெர்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் அமைதியான முறையில் சுயாதீனமான தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையாளர், சிவில் சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts