வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதோர் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள வசதி

வீட்டிலில்லாமை மற்றும் வேறு ஏதேனும் காரணத்தினால் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எஞ்சியுள்ள நாட்களில் தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் ரோஹண அபயரட்ன தெரிவித்தார்.

வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்ட தினத் தன்று அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலில்லாமை அல்லது தபாலில் ஏற்பட்டிருந்த ஏதேனும் பிரச்சினை காரணமாக வாக்காளர் அட்டையை பெற்றுக் கொண்டிராதவர்கள் எஞ்சியுள்ள நாட்களில் அல்லது தேர்தல் தினத்தன்று குறித்த தபால் நிலையத்திற்கு நேரில் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தினால் வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தபால் மா அதிபர் கூறினார்.

கடந்த 04ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் யாவும் நிறைவுபெற்றுள்ளனவென சுட்டிக்காட்டிய அவர் 97 சதவீதமான வாக்காளர் அட்டைகள் இதுவரையில் விநியோகிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Related Posts