கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற ரயில் சேவை கடந்த 2ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரையில் நீடிக்கப்பட்டதையடுத்து புதிய ரயில் சேவை அட்டவணையை யாழ். பிரதம புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் திங்கட்கிழமை (05) வெளியிட்டார்.
குளிரூட்டிய கடுகதி ரயில்
காலை 5.50 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு 11.56 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 12.17 மணிக்கு மாவிட்டபுரத்தை சென்றடையும்.
பிற்பகல் 1.25 மணிக்கு மாவிட்டபுரத்தில் இருந்து புறப்பட்டு 1.42 மணிக்கு யாழ்ப்பணத்தை வந்தடைந்து 1.45 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு கொழும்பை சென்றடைந்து அங்கிருந்து 8.31 மணிக்கு கல்கிசையை சென்றடையும்.
தயட்ட கிருள்ள (கடுகதி) ரயில்
காலை 11.50 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும். 6.18 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு 6.42 மணிக்கு மாவிட்டபுரத்தை சென்றடையும். இதே ரயில், உள்ளுர் சேவையாக மாவிட்டபுரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.34 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
அதேசேவை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு 10.04 மணிக்கு மாவிட்டபுரத்தை சென்றடையும். அங்கிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.54 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து. காலை 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.
யாழ்தேவி ரயில்
காலை 7.15 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.23 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடையும். யாழில் இருந்து புறப்பட்டு 3.39 மணிக்கு சுன்னாகத்தை சென்றடையும். பின்னர் மாலை 6.25 மணிக்கு சுன்னாகத்தில் இருந்து புறப்பட்டு 6.43 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும். இரவு 7.05 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.
தபால் புகையிரதம்
கொழும்பில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 5.08 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும். பிற்பகல் 5.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 5.26 மணிக்கு சுன்னாகத்தை சென்றடையும். பின்னர் பிற்பகல் 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 6.48 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடையும். பின்னர் பிற்பகல் 7.10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.
இந்த ரயில் சேவையானது தினமும் மாவட்டபுரம், தெல்லிப்பழை, மல்லாகம், சுன்னாகம், இணுவில், கோண்டாவில், கொக்குவில், யாழ்ப்பாணம் ஆகிய நிலையங்களில் தரித்துச் செல்லும்.
3 ஆம் வகுப்பு கட்டணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மாவிட்டபுரத்துக்கு 30 ரூபாயும், யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகத்துக்கு 20 ரூபாயும் யாழில் இருந்து கோண்டாவிலுக்கு 10 ரூபாயும் அறவிடப்படும் என அவர் தெரிவித்தார்.