எந்தவொரு தரப்புடனும் இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை – மைத்திரி

‘நாங்கள் எவருடேனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம்.

maithripala-sirisena

எமது வெற்றி உறுதி. நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்துகொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம்’ என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இந்த நாட்டை பிளக்கவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் மூன்று நாட்களில் கடுமையான தேர்தல் வன்முறைகளில் ஈடுபட ஆளுந்தரப்பு முயற்சித்து வருகின்றது. நாம் சமாதானமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்கிறோம். பாரிய வெற்றியுடன் நாம் புதிய யுகத்தைப் படைப்போம்’ என்றார்.

Related Posts