எங்களை பிணங்களாக்குவதற்கு முயற்சி !! – மைத்திரிபால

எதிர்வரும் நாட்களின் தனக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் கடுமையான மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படவுள்ளது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala-sirisena

பக்கமூன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர், ‘எங்களை பிணங்களாக்குவதன் மூலம், சதி மற்றும் வன்முறைகளினூடாக இம்முறையும் ஜனாதிபதியாகும் நோக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றார் என்றால், அந்த எண்ணம் ஒருபோது நிறைவேறாது’ என எச்சரிக்கை விடுத்தார்.

‘எவ்வாறெனினும், எங்களை படுகொலை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாவாரேயானால், அது வரலாற்றுப் புத்தகத்தில் பதியப்படும். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி ஆகியோரை கொன்றுவிட்டு ஜனாதிபதியான ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என வரலாற்றுப் புத்தகத்தில் பதியப்படும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘எதிர்வரும் 8ஆம் திகதி வரையில், எமது உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இது தொடர்பில் , பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரிடம் கதைத்துள்ளேன்.

இதுவா ஜனநாயகம் என அவர்களிடம் நான் கேட்டேன். எங்களுக்கு எதிரான தாக்குதல்களில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அப்பாவிகளாக காணப்படுகின்றனர்’ என மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

Related Posts