ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பரப்புரை நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவுக்கு பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத தேர்தல் பரப்புரைகளை தடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான விசேட திட்டமொன்றினையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.