சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான லிங்கா பலரையும் கவராமல் போனது என்னவோ உண்மை என்றாலும் வசூல் ரீதியில் இன்றும் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் யார் இயக்க போகிறார் என்ற ஒரு கேள்வி கோலிவுட் மத்தியில் எழும்பியுள்ளது, ஒரு தரப்பு மீண்டும் ஷங்கருடன் இணைய போகிறார் என்று கூறி வந்தாலும் இன்னொரு தரப்பு பி. வாசு இயக்க போகிறார் என தெரிவித்துள்ளனர்.
ஒரு இக்கட்டமான சூழ்நிலையில் சந்திரமுகி என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தவர், சமீபத்தில் பி .வாசு அவர்கள் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார், அவருக்கு பிடித்து போனாலும் இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்க வில்லை.
ஒரு இரு வாரத்துக்குள் யாரென்று தெரிந்து விடும் என்று நம்பக தகவல் கசிந்துள்ளது.
ஆக மொத்தத்தில் தலைவர் படம் இந்த வருடம் உண்டு டோய்!