Ad Widget

ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயால் பலரின் வீடுகள் எரிந்து சாம்பலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

australia

இந்தத் தீ மிகவும் அபாயகரமானது என்றும் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தீயணைப்புத் துறை கூறியுள்ளது.

அங்கு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தீ பரவலினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும் சில வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

அடிலைட் நகருக்கு வட கிழக்கே இருக்கும் அடிலைட் மலைகளில் ஏற்பட்டுள்ள தீயானது, கடந்த 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீ என்று தெற்கு ஆஸ்திரேலியாவின் தீ அணைப்புத் துறைத் தலைவர் கிரேக் நெட்டில்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 75 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் அடுத்த சில தினங்களில் குளிர்ந்த காற்று வீசும் என்றும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

இதனால் தீயின் தீவிரம் வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் கோடை காலத்தில், ஆஸ்திரேலியக் காட்டுப் புதர்களில் தீ ஏற்படுவது வழமை என்றாலும், புவிப் பந்து வெப்பமடைந்து வருவதன் காரணமாக தற்போது நிலைமை மோசமாகி வருவதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

Related Posts