ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் பொலிஸார் திடீர் தேடுதல்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவதூறு செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகமான சிறிகோத்தாவில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரை அவமதிக்கும் பிரசுமொன்று தொடர்பாக தேடுதலை மேற்கொள்வதற்கு கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை அவ்வாறான பிரசுரம் எதுவும் அச்சிடப்படவில்லை என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts