Ad Widget

தேசிய கிரிக்கெட் அணியில் சென்ஜோன்ஸ் வீரர்கள் தெரிவு

இலங்கை, பங்களாதேஷ் நாடு களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடை பெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

st-jhons-cricket

கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பரமானந்தம் துவாரகசீலன், செபமாலைப்பிள்ளை ப்ளெமின் ஆகிய இருவருமே வட பகுதியிலிருந்து 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளவர்களாவர்.

வட பகுதியிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் விளையாட வைப்பதற்கான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்துவரும் நிலையில் அப்பகுதியிலிருந்து இரண்டு வீரர்களுக்கு முன்னோடி குழாமில் இடம்பெற வாய்ப்பு கிட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன ஊடகப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துடுப்பாட்ட சகலதுறை வீரரான துவாரகசீலன், 17 வயதுக்குட்பட்ட இலங்கை முன்னோடி குழாமிலும் இடம்பெற்றதுடன் இவ் வருடம் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்த முரளி நல்லிணக்க கூட்டு அணியின் உதவித் தலைவராக விளையாடியிருந்தார்.

ப்ளெமின் 3ஆம் இலக்க இடது கை துடுப்பாட்ட வீரராவார். இவர் நடப்பு பருவ காலத்தில் நான்கு போட்டிகளில் மாத் திரமே விளையாடி ஒரு சதம்,ஒரு அரைச்சதம் பெற்றுள்ளார்.

பொதுத் தராதர பரீட்சை காரணமாக சில போட்டிகளில் அவர் விளையாட வில்லை.

இதேவேளை 19 வயதுக்குட் பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக காலி றிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இக் குழாமில் இடம்பெறும் ஏனைய வீரர்கள் விபரம்:

கவீன் பண்டார, அக்கில் இன்ஹாம் (இருவரும் டி.எஸ்.எஸ்.), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் லக்சித்த (இருவரும் மொறட்டுவை புனித செபஸ்தியார்), அசித்த பெர்னா ண்டோ (கட்டுநேரிய புனித செபஸ்தி யார்). சஹான் ஆரச்சிகே, ஷம்மு ஆஷான் (இருவரும் ஆனந்த), லசித் லக்ஷான் (மாத்தறை புனித தோமஸ்), சேனுத்த விக்ரமசிங்க (கல்கிசை புனித தோமஸ்), ஷலிந்து உஷான், விஷார்ட் ரந்திக்க (இருவ ரும் இஸிபத்தன), வனிந்து ஹசர ங்க, கமிந்து மெண்டிஸ் (இருவரும் றிச்மண்ட்), தேனுக்க தாபரே (லும்பிணி), ரமேஷ் நிஷான்த (மாத்தறை புனித செர்வேஷஸ்), அரவிந்த அத்துகோரள (புனித சூசை யப்பர்), ரவிந்து திலக்கரட்ன (என்.சி.சி.), தமித் சில்வா, கேஷான் விஜேரட்ன (இருவரும் மலியதேவ), நிஷான் பீரிஸ் (புனித பேதுரு), துவிந்து திலக் கரட்ன, லஹிரு குமார, நுஷான் வீர சிங்க (மூவரும் திரித்துவம்), சாமி க்க கருணராட்ன, ஹிமேஷ் ராம நாயக்க (இருவரும் றோயல்), திலான் நிமேஷ் (பிறின்ஸ் ஒவ் வேல்ஸ்), பசிந்து இசிர (விமானப்படை).

Related Posts