கையொப்பங்களை பரிசீலிக்கவும் நிபுணர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் என கூறப்படுவதில் கள்ள கையொப்பம் இடப்பட்டுள்ளதாக கூறப்பட்டதையடுத்து, அது தொடர்பில் நிபுணர்களில் அபிப்பிராயத்தை பெறுமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் போலியானது என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அது தொடர்பிலான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

முன்னதாக, ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, பொது எதிரிணியின் ஜனாதிபதி வேட்பாளர் மை;த்திரிபால சிறிசேன, போலி ஆவணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2.5 பில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோரி கேள்விபத்திரமொன்றை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts