Ad Widget

துருவங்கள் சந்தித்தபோது!!!

வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சபை ஒன்றுகூடலின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பில் முடிவுற்றது.

இதில் இரு தரப்பு உறுப்பினர்களும் காயம் அடைந்து இரத்த காயத்துடன் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முக்கிய இரு பிரமுகர்கள், அச்சண்டையினை மறந்து சிரித்து மகிழ்ந்து குசலம் விசாரித்தனர்.

அச்சம்பவத்தில் இரத்தக் காயமடைந்த அரசியல்வாதிக்கு எதிராக சில இடங்களில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவரது புகைப்படத்துடன், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதை யார் ஒட்டினார்கள் என்று தெரியாத நிலையில், இச்சம்பவத்தை குறப்பிட்டு ‘என்னைக் கேட்டிருந்தால் நல்ல படம் தந்திருப்பேனே’ என்றார். அதனைக்கேட்ட எதிரணி உறுப்பினர் ‘நீர் எல்லா படத்திலும் வடிவுதானே’ என்று கூறியதும் அருகில் நின்ற அனைவரும் புன்னகைத்தனர்.

இதற்கிடையில் காயமடைந்தவரின் வயிற்றை செல்லமாக எதிரணி உறுப்பினர் தட்டிபோது அவர் முதுகிலே தட்டி ஆசுவாசப்படுத்தினார்.

இவ்வாறு அனைத்து செயற்பாடுகளிலும் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டால் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Related Posts