சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடமாகாண மாணவர்கள் கௌரவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை சிறந்த பெறபேறுகளைப் பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதன்கிழமை (31) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது.

தேசிய ரீதியில், மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த வடமாகாணத்தை சேர்ந்த 23 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பணப்பரிசும் வழங்கப்பட்டது.

கணிதப்பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாண இந்து கல்லூரி மாணவன் பாகியராஜா டாரூகீசன், அதே கணிதப்பிரிவில் யாழ்.மாவட்ட ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற ஹாட்லி கல்லூரி மாணவன் புவனேந்திரன் வைகுந்தன், மூன்றாம் இடம்பெற்ற யாழ்.இந்து கல்லூரி மாணவன் எம்.சுதர்சன் ஆகியோரும்,

யாழ்.மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற புனித பரியோவான் கல்லூரி மாணவன் முகுந்தன் தர்சிகன், வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவி பாலச்சந்திரன் கௌசனா, கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் செல்வராஜா துஷியந்தன் ஆகியோர் யாழ்.மாவட்ட ரீதியில் கௌரவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த குணரத்தினம் கதீஸ், உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த இராமமூர்த்தி ஜனத்,

கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற அக்கராயன் மகா வித்தியாலயத்தை சேர்ந்த யோகரத்தினம் ஜனுசன், அதேபிரிவில் இரண்டாமிடம் பெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் டலி வன்னியசிங்கம், வணிகப்பிரிவில் முதலிடம்பெற்ற முருகானந்த கல்லூரியை சேர்ந்த தியாகலிங்கம் சயந்திகா ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட ரீதியில் கௌரவிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற புதுக்குடியிருப்பு மகா வித்தியாலய மாணவன் எஸ்.பிரணவன், உயிரியில் பிரிவில் முதலிடம் பெற்ற தனிப்பட்ட பரீட்சார்த்தி ரி.குகப்பிரியா, கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி ஆர்.லாவன்யா, வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைதீவு மகா வித்தியாலய மாணவி எஸ்.வேணுயா ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக கௌரவிக்கப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் றோமேஸ் கிறோஸ்குமார், உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவசுப்பிரமணியம் மேகலந்திரன், கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற நெலுக்குளம் கனிஷ்ட மகா வித்தியாலய மாணவி ஆனந்தராசா தர்மினி, வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற சிவப்பிரகாசா மகளீர் கல்லூரி மாணவி தம்பையா மிதுளா ஆகியோர் வவுனியா மாவட்டம் சார்பாக கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற அல்-அஷார் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் மன்சூர் அப்துல்லா, உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற சென் சேவியர் ஆண்கள் கல்லூரி மாணவன் ஜெறோமெமில் றொஷின்ரன், கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற நானாட்டான் மகா வித்தியாலய மாணவி சத்தியசீலன் அன்னே டிலக்ஷி, வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முருங்கன் மகா வித்தியாலய மாணவன் கிருஸ்ணகுமார் கவிந்தன் ஆகியோர் மன்னார் மாவட்டம் சார்பாக கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை. ஐங்கரநேசன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமகாhண எதிர்க்கட்சி தலைவர் சின்னதுரை தவராசா, வடமாகாண பிரதம செயளாலர் திருமதி விஜலக்ஷ்மி ரமேஸ், ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Related Posts