புதிய ஆண்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களின் உற்சாகம் உருவாகவும், அனைத்து சமூகங்களிடையே பரஸ்பர நல்லுறவுகளும் சாந்தியும் சமாதானமும் நிலவவும் இறைவனிடம் வேண்டுவோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,
போரினால் இடம்பெயர்ந்த மற்றும் 2014 ஆம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புத்தாண்டில் தத்தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்று நிம்மதியாக வாழ இறைவன் வழியமைக்கவேண்டும்.
மேலும் இந்த நாட்டின் கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட , இடம்பெயர்ந்த உறவுகளை இழந்த அனைத்து மக்களின் மனங்களிலும் அமைதி பிறக்கவும் அவர்களின் எதிர்காலம் சிறப்புற்று அமையவும், புதிய ஆண்டு வழிசமைக்கட்டும்.
மக்களின் அன்றாட வாழ்க்கை பயப்பீதியற்று நிம்மதி நிறைந்ததாக விளங்கி, தொழில் வளங்கள், வயல் , விவசாய நிலங்கள் , கடல் வளங்கள் சிறப்புற்று புதிய ஆண்டு புதுப்பொலிவுடன் பொங்கிப் பூரிக்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திந்தார்.