யாழ். இந்தியத் தூதரகத்தின் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

யாழ். இந்திய துணைத்தூதரக கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய 66 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.

indian-sty

கர்நாடக சங்கீதம், வயலின், ஹிந்திமொழி மற்றும் யோகா கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

வட இலங்கை சங்கீதசபை மாணவர்களின் வயலின் கச்சேரி, ஹிந்திமொழி கற்ற மாணவிகளின் நகைச்சுவை நாடகம், கர்நாடக இசைக்கச்சேரி ஆகியன இதன்போது நடைபெற்றன.

Related Posts