இரகசிய உடன்படிக்கைக்கான தேவை எனக்கில்லை, திகதியிலும் தவறு – மைத்திரி

பிர­பல்­ய­மான இரு­வரின் கையொப்­பங்­களை சட்ட விரோ­த­மா­கவும் தவ­றான கையொப்­ப­மா­கவும் பயன்­ப­டுத்­து­வது தண்­டிக்­கப்­பட வேண்­டிய குற்­ற­மாகும். இவ்­வா­றான குற்­றத்­தினை செய்­த­மைக்­காக திஸ்ஸ அத்­த­நா­யக்­க­விற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என தெரி­விக்கும் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எனது குரலும் எனது கையொப்­ப­முமே இன்று ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்கு உதவ பயன்­ப­டு­கின்­றது. எனது ஆத­ரவு மஹிந்த ராஜபக் ஷவிற்கு தேவைப்­ப­டு­கின்­றது எனவும் குறிப்­பிட்டார்.

maithripala-sirisena

எதிர்க்­கட்சி தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் பொது செய­லாளர் அர­சாங்­கத்தின் பக்கம் சென்­ற­போது பொது எதி­ரணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் எவ்­வ­கை­யான உடன்­ப­டிக்­கை­யினை மேற்­கொண்­டுள்­ளது என்­பது எனக்கு தெரி­விக்­க­வில்லை எனக் குறிப்­பிட்டார். ஆனால் இன்று நானும் எதிர்க்­கட்சி தலை­வரும் இர­க­சிய உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக அறிக்கை ஒன்­றினை சமர்ப்­பித்­துள்ளார்.

அர­சாங்­கத்தின் பிர­தா­னிகள் எதை சொல்­கின்­ற­னரோ அதையே செய்யும் வாடிக்­கைக்கு திஸ்ஸ பழ­கிக்­கொண்டு விட்டார். அர­சாங்கம் தனது வெற்­றி­யினை தக்க வைத்­துக்­கொள்ள பழ வழி­மு­றை­களை மேற்­கொள்­கின்­றது. அர­சாங்கம் செய்யும் புத்­தி­சா­லித்­த­ன­மான விட­யத்­திலும் ஒரு முட்­டாள்­த­ன­மான தவ­றினை விட்டு விடு­கின்­றது. நானும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் செய்து கொண்­டுள்­ள­தாக தெரி­விக்கும் இர­க­சிய உடன்­ப­டிக்­கையில் ஒரு தவறு உள்­ளது.

அதா­வது நான் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யது நவம்பர் மாதம் 21ஆம் திகதி. ஆனால் நாம் செய்­துள்­ள­தாக அர­சாங்கம் குறிப்­பிடும் உடன்­ப­டிக்கையில் நவம்பர் 1ஆம் திகதி என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நான் நவம்பர் மாதம் 1ஆம் திகதி அர­சாங்­கத்தில் இருந்­த­போது பொது எதி­ர­ணி­யுடன் கைகோர்க்கும் எவ்­வித திட்­டமும் இருக்­க­வில்லை. நான் இறுதி தினங்­க­ளி­லேயே வெளி­யேற தீர்­மானம் எடுத்­தி­ருந்தேன். இவர்­களின் பொய்­யான அறிக்­கை­களை நிரூ­பிக்க உண்­மை­யா­ன­தொரு ஆதாரம் இல்­லாது போய்­விட்­டது.

நான் எனது மனச்­சாட்­சிக்கு எதி­ரான எந்த வேலை­யி­னையும் இது­வரை காலமும் செய்­ய­வில்லை. இப்­போது எதி­ர­ணியில் இருக்­கும்­போதும் எனது மனச்­சாட்­சிக்கு எதி­ரான செயற்­பா­டுகள் எதையும் செய்­யப்­போ­வ­தில்லை.

அதேபோல் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இர­க­சி­ய­மா­ன­தொரு மோச­மான உடன்­ப­டிக்­கை­யினை செய்து கொள்ள வேண்­டிய தேவை எனக்­கில்லை. அர­சாங்கம் எம் வெற்­றி­யினை தெரிந்து கொண்டால் நாம் நிச்­சயம் வெற்றி பெறப் போகின்றோம் என்­பது ஜனா­தி­ப­திக்கு தெரிந்து விட்­டது. எனவே எமது வெற்­றி­யினை தடுக்க இவர்கள் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். எனினும் இவர்கள் தயா­ரிக்கும் ஆவ­ணங்­களை சரி­யாக தயா­ரித்து நிரூ­பிக்க முடி­யாமை கவ­லைக்­கி­ட­மா­னது.

மேலும் நான் அர­சாங்­கத்தில் இருக்கும் போது நான் அறிக்­கை­க­ளுக்கு இட்­டி­ருந்த கையொப்­பங்கள் இவை­யென்­பது தெளி­வாக தெரி­கின்­றது. இப்­போதே அர­சாங்கம் தனது தேர்தல் பிர­சா­ரங்­களை சட்­ட­வி­ரோ­த­மாக மேற்­கொண்டு வரு­கின்­றது. ஊட­கங்­க­ளிலும் பத்­தி­ரி­கை­க­ளிலும் சட்­ட­வி­ரோத தேர்தல் பிர­சா­ரத்­தினை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இது தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எனது கையொப்­பமும் எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கையொப்­பமும் மிக முக்­கி­ய­மா­னவை. அதை தவ­றான வகை­யிலும் பிழை­யா­ன­தா­கவும் பயன்­ப­டுத்­து­வது குற்­ற­மாகும். எனவே இதற்கு எதி­ராக நான் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரி­டமும் பொலிஸ்மா அதி­ப­ரி­டமும் முறைப்­பாட்­டினை செய்­ய­வுள்ளேன். உட­ன­டி­யாக இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து சட்டவிரோத தேர்தல்கள் பிரசாரங்களை நிறுத்த வேண்டும்.

மேலும் ஜனாதிபதி என்னை இழிவாக பேசினாலும் அரசாங்கத்தில் இருக்கும் போது எதையும் செய்யாதவன் என விமர்சிக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி இன்று வெற்றி பெறுவதற்கு எனது குரலும் எனது கையொப்பமும் அவருக்கு தேவைப்படுகின்றது. எனவே ஆதரவினைக்காட்டியே ஜனாதிபதியின் வெற்றியினை தக்கவைக்க முயற்சிக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts