Ad Widget

திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது!– ரவி கருணாநாயக்க

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனூடாக வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதுடன், படையினர் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் இரகசிய உடன்படிக்கை பற்றி திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியை ஜனாதிபதி மஹிந்தவினால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜனாதிபதியின் சார்பில் திஸ்ஸ அத்தநாயக்க மிகவும் இழிவான அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Posts