‘மொழி’, ‘அபியும் நானும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். வித்தியாசமான கதையும் திரைக்கதையும் கொண்டு வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு நாகார்ஜூனாவை வைத்து ‘பயணம்’ படத்தை இயக்கினார்.
இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கௌரவம்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இப்படத்தையடுத்து அடுத்ததாக படம் இயக்க தயாராகிவிட்டார். இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘உப்பு கருவாடு’ என்று பெயர் வைத்துள்ளார்.
இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான சதீஷ், நந்திதா ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் இடம் பெறும் மற்ற கதாபாந்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் கூடிய விரைவில் வெளியிட உள்ளனர்.