தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) மரியாதை நிமித்தமாக வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை அவரது வாசஸ்தலத்துக்குச் சென்று சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு முதல்வருடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டிருந்தார்.