சாஹசத்துக்கு குரல் கொடுத்த சங்கர் மகாதேவன்

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சாஹசம்’. இப்படத்தை அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பாடல்கள் பாடியுள்ளனர்.

shankarmahathevanpirashanth

ஏற்கெனவே, இவருடைய இசையில் அனிருத், நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், யோ யோ ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோர் ஒரு பாடல் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இசையமைப்பாளரும், முன்னணி பாடகருமான சங்கர் மகாதேவனும் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல் நேற்று மும்பையில் பதிவானது. பெண்களை கவரும் வண்ணம் பாடலாசிரியர் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கெனவே ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.

இப்போது பிரசாந்த் பாடும் வரிகளை ஷங்கர் மகாதேவன் பாடியது சிறப்பாக வந்துள்ளது என தயாரிப்பாளரும் இயக்குனருமான தியாகராஜன் கூறியுள்ளார். மும்பையில் சங்கர் மகாதேவன் பாடல் பதிவாகும்போது உடன் இருந்த பிரசாந்த் உற்சாக மிகுதியில் ரிக்கார்டிங் தியேட்டரிலேயே மகிழ்ச்சியோடு சங்கர் மகாதேவனை கட்டித்தழுவி பாராட்டினாராம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சாஹசம்’ படத்தின் பாடல்களை கேட்பதற்கு ஒட்டுமொத்த இசை பிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகிறது.

Related Posts