மத்திய அரசால் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணம் ஆறாவது இடத்தில் இருப்பதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17) இடம்பெற்றது.
இதன்போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
மேல் மாகாண சபைக்கு 45522.910 மில்லியன் ரூபாயும் மத்திய மாகாண சபைக்கு 28213.350 மில்லியன் ரூபாயும் தென் மாகாண சபைக்கு 26162.800 மில்லியன் ரூபாயும், வடமேல் மாகாண சபைக்கு 26029.770 மில்லியன் ரூபாயும் சப்ரகமுவ மாகாண சபைக்கு 22298.100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் வடமாகாண சபைக்கு 20410.800 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு அது ஆறாவது இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.