யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.விமலசேன புதன்கிழமை (17) தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததுடன் சிலர் காமயடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கூறிய அவர்,
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் மறுதரப்பினரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முறைப்பாடு பதிவு செய்யவில்லை.
ஆயினும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பினர் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட மற்றைய தரப்பினரிடம் வாக்குமூலங்களை பெறவுள்ளளோம்’ என பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.