‘ஐ’ படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டியும், குறைத்தும் கஷ்டப்பட்டு, அதே நேரத்தில் இஷ்டப்பட்டும் நடித்துக் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். இதை அவரே விருப்பப்பட்டு செய்ததாக கூறப்பட்டது.
தற்போது, ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதில், உடல் மெலிதான விக்ரம், ரொம்பவும் களைப்புடன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்தவர்கள் இது விக்ரம்தானா? என்று வியக்கும் அளவுக்கு அந்த படம் அமைந்துள்ளது.
‘ஐ’ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். எமிஜாக்சன் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளார். நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் வருகிற பொங்கலுக்கு முன்கூட்டியே வெளிவரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.