இராணுவ ஆக்கிரமிப்பு எமது ஆட்சியில் இருக்காது – ரணில்

அபி­வி­ருத்தி என்ற பெயரில் அனைத்து துறை­க­ளிலும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பினை மேற்­கொள்ளும் இரா­ணுவ ஆட்சி எமது அரசாங்கத்தில் இருக்­காது. எமது ஆட்சியில் அதன் கட­மை­யினை மட்­டுமே இரா­ணுவம் செய்யும் என தெரி­வித்த எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்கை மறைக்­கப்­பட்டு விட்­டது. அதனை மீட்­டெ­டுக்கவேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

Ranil_Wickramasingheசுற்­று­லாத்­துறை சார் வர்த்­த­கர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றை நேற்று எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்சி தலைவர் காரி­யா­ல­யத்தில் மேற்­கொண்­டி­ருந்தார். இதில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சுற்­று­லாத்­துறை நாட்டின் மிக முக்­கிய வருவாய். அதில் ஊழல் மோச­டிகள் இடம்­பெ­று­வது நாட்டின் அபி­வி­ருத்­தி­யையே வீழ்த்தி விடும். அவ்­வா­றா­ன­தொரு வர­லாற்றுத் தவ­றினை இன்று மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் செய்து வரு­கின்­றது. பத்­தி­ரி­கை­களில் தொலைக்­காட்­சி­களில் விளம்­ப­ரப்­ப­டுத்தி நாட்டின் சுற்­று­லாத்­து­றை­யி­னரை கவர முடி­யாது. அதையும் தாண்டி நாட்டில் உண்­மை­யான அபி­வி­ருத்­தியும் பாது­காப்பும் இடம்­பெற வேண்டும்.

சுற்­று­லாத்­து­றையில் இருந்து அனைத்து அபி­வி­ருத்­தி­க­ளுக்கும் இரா­ணு­வத்­தையும் பாது­காப்பு அமைச்சின் கீழ் தாக்கம் செலுத்தி நாட்­டினை இரா­ணுவ மயப்­ப­டுத்த முயற்­சிப்­ப­தனால் பலன் எதுவும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. எமது அர­சாங்­கத்தின் இரா­ணுவம் அதன் கட­மை­யினை மட்­டுமே செய்யும். அதனைத் தாண்­டிய இரா­ணுவ ஆட்­சிக்கு நாம் துணை போக­மாட்டோம்.

மேலும் இன்று சர்­வ­தேச மட்­டத்தில் இலங்கை அதன் நிலை­யினை இழந்து விட்­டது. உலக சுற்­றுலா வரை படத்தில் இலங்கை மறைக்­கப்­பட்டு விட்­டது. இந்­நி­லை­யினை மாற்­றி­ய­மைக்க வேண்டும். அன்று இலங்­கையை விடவும் கீழ் நிலையில் உள்ள நாடு­களின் சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி கண்டு விட்­டது. இலங்கை பின்­ன­டைந்து வரு­கின்­றது. இந்த பெரு­மையும் புகழும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கே சேரும்.

எனவே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அரசாங்கத்தில் உண்மையான அபிவிருத்தி முன்னெடுக்கப்படும். உண்மையான ஆட்சி நிலவும் வகையில் வர்த்தகர்களும் நன்மையடையும் பொருளாதார நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts