விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இதுதவிர, சங்கர் இயக்கத்தில் எமிஜாக்சனுடன் விக்ரம் இணைந்து நடித்து ‘ஐ’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விக்ரம், விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இப்படம் இந்தி படத்தின் ரீமேக்காக இருக்கும் என்றும், அக்ஷய் குமார் நடித்த படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என நம்பலாம்.
விஷ்ணுவர்தன் தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அஜித்தை வைத்தது இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தவர். அவருடன் விக்ரம் இணைவது சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.