Ad Widget

தமிழ்நாட்டையும் வடக்கு கிழக்குடன் இணைத்து தமிழீழம் அமைப்பதே புலிகளின் திட்டமாம்!

ஜம்மு காஷ்மீர் விடுதலை அமைப்பின் பிரிட்டன் கிளை, உட்பட இந்தியாவின் தடைசெய்யப்பட்ட பல அமைப்புகளுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

tamileelam

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்த விசேட நீதிமன்றின் முன் இடம்பெற்ற விவாதத்தின்போதே இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டையும், இலங்கையின் வடகிழக்கு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடாகவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பரந்த தழிழ்தேசம் என்ற கருத்தை விடுதலைப்புலிகள் ஊக்குவிப்பதாகவும், நீதிமன்றில் மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்பொன்று முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மற்றும் நாரயணசாமி ஆகியோரின் வீடுகளுக்கு வெளியே சிறிய குண்டுவெடிப்புகளை மேற்கொண்டது, என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

2009 இல் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப்புலிகள் தனிநாட்டுக் கொள்கையை கைவிடவில்லை. அந்த அமைப்பின் மீதான தடையை நீக்குவது அவர்கள் மீண்டும் இந்தியாவில் செயற்படுவதற்கு வழிவகுக்கும். விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவில் உள்ள ஏனைய பிரிவினைவாத அமைப்புகளுக்கும் உந்துசக்தியாக அமையும் எனவும் தமிழக அரசின்பிரதிநிதி விசேட நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

Related Posts