அமெரிக்காவின் பென்சிலிவேனியா மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரியை போலிசார் தேடி வருகின்றனர்.
பென்சில்வேனியா மாநிலத்தின் மாண்ட்கோமரி பகுதியில் 35 வயதான பிராட்லி வில்லியம் ஸ்டோன் என்பவர் தனது உறவினர்கள் 6 பேரை வெவ்வேறு ஊர்களில் சுட்டுக்கொன்று தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
வேறு மூன்று பேர் காயமடைந்திருக்கின்றனர்.
அவர் ஆயுதந்தாங்கியிருக்கிறார், ஆபத்தானவர் என்று கூறிய போலிசார், உள்ளூர்வாசிகளை தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
ராணுவ உடையணிந்திருக்கும் இவர், சிகப்பு தலைமுடி கொண்டவர் என்று போலிசார் கூறுகின்றனர்.