சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இதில் நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ரேவ் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரோல் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்தவர்கள் அனைவரும் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பாலாவின் பி ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
இதைப்பற்றி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி கூறும்போது, ‘பிசாசு படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படத்தை டிசம்பர் 19-ம் தேதி வெளியிடவுள்ளோம்’ என்றார்.