ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் ஆர்யா

சிவா மனசுல சக்தி’, ‘மாயக்கண்ணாடி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல படங்களில் நடிகர் ஆர்யா நட்புக்காக ஒரேயொரு காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.

jeyamravi-arya

அப்படத்தில் நடித்தவர்கள் நண்பர்கள் என்ற அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் இவ்வாறு ஒரேயொரு காட்சியில் நடித்துக் கொடுப்பதை ஆர்யா வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் ஆர்யா ஒரு காட்சியில் நடிக்கிறாராம். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

என்னுடைய நண்பன் ஆர்யா, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நட்புக்காக ஒரு காட்சியில் நடிக்கிறார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் இந்த படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. நன்றி மச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ரோமியோ ஜுலியட்’ படத்தை லட்சுமண் இயக்குகிறார். இளமை ததும்பும் ரொமான்ஸ் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவிருக்கின்றனர்.

Related Posts