தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் நடிக்க விரும்பும் நடிகர் அஜித். ஆனால், சமீபத்தில் காமெடி நடிகர் சூரி கூறியிருப்பது ஆச்சரியத்தை வரவைத்துள்ளது.
இதில் முதலில் வீரம் படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிக்க சூரியிடம் தான் பேச்சு வார்த்த நடந்ததாம்.
அதில் ஒரு காட்சியில் அஜித்திடம் வம்பு செய்வது போல் வருவதால், நான் அஜித்துடன் நடிக்கவில்லை என்றால் கூட கவலையில்லை, ஆனால், அவரை கலாய்ப்பது போல் ஒரு போதும் நடிக்க மாட்டேன்.
இதற்கு கடைசி வரை அவர் ரசிகனாகவே இருந்து விடுவேன், மேலும் ஊரில் என் தம்பி அவருக்கு மன்றம் வைத்து படம் ரிலிஸின் போது பால் அபிஷேகம் செய்வான், நான் அப்படி நடித்தால் என்னை அவன் ஊருக்குள்ளேயே விடமாட்டான்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.