விஜய்யின் 60வது படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த்?

இளையதளபதி விஜய் நடிக்கும் 60 வது படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

kv-anand-vijay

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அப்படத்தின் வெளியிட்டு வேலைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த். இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை இயக்கப்போவதாக கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆக்சன், ரொமான்ஸ் கலந்த கதையாக விஜய் 60 படம் இருக்கும் என்றும் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அநேகன் படம் விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்தான் அதில் நடிக்க முடியாமல் போனதால் தனுஷ் நடித்தார். இந்த நிலையில் விஜய்க்காக அடுத்த கதையை தயார் செய்துள்ளார் கே.வி. ஆனந்த்.

அவரது கனவு இதன் மூலம் நனவாகப்போகிறதாம். தனது அடுத்த பட ஹீரோ விஜய் என்று அறிவித்துள்ள கே.வி. ஆனந்த், விஜய்க்கு ஜோடி யார் என்பதை கூறவில்லை. விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து 59வது படமாக “ராஜா ராணி ” புகழ் அட்லி உடன் இணைகிறார் விஜய். தொடர்ந்து 60வது படத்திற்கும் தயாராகிவிட்டார் விஜய். 2015 ஆம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Posts