அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’ படங்கள் பொங்கலுக்கு மோத இருந்தன. ஆனால் தற்போது ‘ஐ’ படத்தை ஒரு வாரத்துக்கு முன்பே திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் வருவதை தடுக்க ‘ஐ’ படத்தை முன் கூட்டியே கொண்டு வருகின்றனர்.
‘ஐ’ பட தொழில் நுட்ப பணிகள் முன்பே முடிந்துவிட்டது. பாடல்களும் வெளியாகியுள்ளது. ‘என்னை அறிந்தால்’ பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.