சித்தார்த், ப்ரித்திவிராஜ், வேதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் காவியத் தலைவன். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நாடக கம்பெனியை மையமாக வைத்து உருவாக்கியிருக்கும் இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைய தளபதி விஜய் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள விஜய் கூறியிருப்பதாவது;-
‘‘இப்படத்தை பார்த்தேன். சமீபத்தில் வெளிவந்த படங்களில் சிறப்பான தமிழ் படமாக காவியத்தலைவன் அமைந்திருக்கிறது. தமிழ் சினிமா உலகில் அரிதாகதான் இது மாதிரி படங்கள் ரிலீசாகும். எல்லோரும் குடும்பத்தோடு பார்த்து கொண்டாட வேண்டிய படம்.
இயக்குனர் வசந்த பாலனுக்கு எனது வாழ்த்துக்கள். படத்தில் நடித்திருக்கும் சித்தார்த், ப்ரித்விராஜ், வேதிகா, ஏ.ஆர். ரஹ்மான், நீரவ்ஷா மற்றும் இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய வெற்றி வாழ்த்துக்கள்’’ என்று கூறியுள்ளார்.